Thursday, October 6, 2011

ஏர்செல் என்னும் உலக மகா திருட்டுப்பசங்க....

ஏர்செல் என்னும் உலக மகா திருட்டுப்பசங்க....

ஏர்செல்லை பற்றி மறுபடியும் ஒரு பதிவான்னு என்னை திட்டாதீர்கள். அவங்க செய்த திருட்டுத்தனம் அப்படி....

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு ஏர்செல்லிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூபாய் 79 க்கு ரேட்கட்டர் போட்டால் 19 ரூபாய் கிடைக்கும் என்றும், மீதி 60 ரூபாய்க்கு சலுகையாக ஏர்செல்லிலிருந்து ஏர்செல்லிற்கு பேச ஆறு வினாடிகளுக்கு ஒரு பைசா (அதாவது ஒரு நிமிடத்திற்கு 10 பைசா, 12 வினாடிகளில் அழைப்பை  கட் செய்துவிட்டால் இரண்டு பைசா மட்டுமே) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த சலுகை ரம்ஜானுக்காக என்றும் 60 நாட்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் வழக்கமாக ரேட்கட்டர் எல்லாம் பயன்படுத்துவதில்லை. ஒரு வினாடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் இருப்பவன் நான். சரி இந்த முறை ரேட்கட்டர் போடலாம் என்று முடிவுசெய்து 79 ரூபாய்க்கு போட்டேன். சொன்னது போல் 19 ரூபாய் என் கணக்கில் சேர்ந்திருந்தது. என் ஸ்டேட்டசில் போய் செக் செய்து பார்த்தால் அவர்கள் இரண்டு மாதம் என்று சொன்ன சலுகை ஒரு மாதம் மாட்டுமே என்று காட்டியது. நான் உடனே கஸ்டமர் கேரில் அவர்களை தொடர்புகொண்டு கேட்டேன். அதற்கு அவர்கள் முதலில் ஒரு மாதம் தான் காட்டும். அடுத்த மாதம் இதே தேதி மீண்டும் ஒரு மாதத்திற்கு  நீடிப்பு கிடைக்கும் என்றார்கள். அதன் பிறகு அதை விட்டுவிட்டென்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு சரியாக ஒரு மாதம் கழித்து எனக்கான சலுகை மாற்றப்பட்டு பழையபடியே ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்று மாறிவிட்டது. எனக்கு கடுமையான ஆத்திரம்...மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்டேன். ஒரு பெண் தான் எடுத்தார். அதற்க்கு அவர் அப்படியெல்லாம் சலுகையே இல்லையே என்றார். நான் விபரமாக சொன்னேன். அப்படி இருக்காது என்றே கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னார்.
உடனே எனக்கு கோபம் உச்சிக்கு போனது....
சலுகை என்று சொல்லிவிட்டு ஏமாற்றும் ஏர்செல் முதலாளி பேசாமல் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம். அல்லது வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம். இப்படி ஏமாற்றுவது திருட்டுத்தனம் என்று கடுப்புடன் சொன்னேன்.

அதற்கு அவர்கள் சார்...கொஞ்ச நேரம் காத்திருங்கள் செக் பன்னிட்டு சொல்றேன் என்றார்
என்னால் காத்திருக்க முடியாது மேடம்...ஒரு நாளைக்கு எத்தனை தடவை அந்த சலுகை, இந்த சலுகைன்னு மெசேஜ் அனுப்புறீங்க...கால் பன்னுறீங்க...அதே போல இப்பவும் நீங்க செக் பன்னிட்டு கால் பன்னுங்க...திருட்டுப்பசங்க ஏமாத்தறதிற்கே ஒரு கம்பெனி நடத்தறாங்க என்று கடுப்புடன் சொல்லி அழைப்பை கட் பன்னிட்டேன்.
ஆனால், இந்த நிமிடம் வரை எனக்கு அவர்களிடமிருந்து பதிலும் வரவில்லை, சலுகையும் கிடைக்கவில்லை.
 நம்மிடமிருந்து இப்படி திருடியும், பிச்சை எடுத்தும்தான் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் நடிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் போல இந்த திருட்டு பசங்க...

என்னைப்போல எத்தனை பேர்களை ஏமாற்றினார்களோ இந்த நாதாரிகள்?
இந்த திருட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களினால் ஏமாந்து விடாதீர்கள் நண்பர்களே...குறிப்பாக அவர்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்தால் படிக்காமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள்...இல்லாவிட்டால், என் நிலைதான் உங்களுக்கும்.