Monday, August 13, 2012

நாடோடியின் பார்வையில் கவிதைகள்


நாடோடியின் பார்வையில் கவிதைகள்


அனைவருக்கும் வணக்கம்.

பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விளக்க வேண்டிய விடய‌த்தை, நான்கு வரிகளில் அழகாக கவிதையாக சொல்லி விட முடியும். கவிதையை உரை நடைகளை வாசிப்பது போல விரைவாக வாசித்து செல்ல முடியாது, எனவே தான் பலர் கவிதை வாசிப்பதை சிரமமாக‌ உணர்கிறார்கள், அவசரமாக வாசிப்பதை பழக்கமாக கொண்ட‌ சிலர் "என்ன கவிதை இது" சுத்தமா புரியவில்லை என்று சலித்துக் கொள்கிறார்கள். கவிதைகளிலும் பல வகைகள் உண்டு. முன்பு தமிழில் அதிகமாக மரபுக் கவிதைகளை தான் பார்க்க முடியும். அவைகளை புரிந்து கொள்ள தனியாக விளக்க உரைகளை படித்தால் மட்டுமே எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். இப்போது எழுதப்படும் புதுக்கவிதைள் எல்லோராலும் எளிதாக  படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.

வலைத்தளங்களில் நண்பர்கள் எழுதும் சில கவிதைகளை படிக்கும் போது மனம் நம்மையறியாமல் அதில் ஊன்றி விடுவதை பார்க்க முடியும், அதன் கவர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சிறிது நேரம் எடுத்துவிடும்.




கவியாகிய எழுதுகோல்கள்...!

விவ‌சாயின் கஷ்டங்களையும், பருவ நிலை மாற்றங்களையும், அழிந்து வரும் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதை நோக்கி பயணிக்கிறது என்று பல கேள்விகளை கேட்க வைத்து சிந்திக்கவும் வைக்கும் கவிதை இது. கண்டிப்பா நீங்களும் படிங்க..

"உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!"


                     சிட்டுக்குருவி